இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கெதிரான மனு மீண்டும் ஒத்திவைப்பு!
Sri Lanka Cricket
Harin Fernando
By Beulah
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று (05) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கால அவகாசம்
இதன்போது புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமது தரப்பினரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை என தெரிவித்துள்ளார்.
இதன்படி வழக்கு விசாரணை டிசம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்