எங்கள் உயிர்களுக்கு ஆபத்து..! ஐ.நாவை நாடியது போராட்டக்குழு
United Nations
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kanna
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டக்குழுவினர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
எதிர்காலத்தில் தங்கள் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இலங்கையின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகளை சபை தலையிடவேண்டும் என குறித்த கடிதத்தில் போராட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐநாவிடம் கடிதத்தை கையளிக்கும் செயற்பாட்டில் பல பௌத்தமதகுருமார் உட்பட செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
