வலுக்கும் நெருக்கடி! நாட்டிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள்
Sri Lanka Economic Crisis
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
Financial crisis
By Kanna
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் சுகாதாரத்துறை
நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்காரணமாக மருத்துவமனைகளின் செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்