கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள் சிக்கின..!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் பேலியகொட இலங்கை சுங்கப் பிரிவின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைபொருட்கள் இன்று(06) கொழும்பு பேலியகொடை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
122 மில்லியன் பெறுமதி
இந்நிலையில் மரப் பெட்டிகளில் இருந்து 16 கிலோ குஷ் மற்றும் 01 கிலோ ஐஸ் போதைபொருள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 122 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.