உலக நாடுகளுக்கு சவால்: தனது பொறியில் தானே சிக்கிய சீனா!
சீனாவின் மஞ்சள் கடல் பகுதியில் வேறு நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் சீனா சங்கிலி பொறிமுறை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொறியில் சீனாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பலே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரபரப்புக்குள்ளாகியுள்ளது.
தென் சீனக்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியுள்ள சீனா உலக வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் வகையில் தற்போது செயல்பட்டு வருவதோடு அண்டை நாடுகளோடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றது.
சங்கிலிபொறிமுறை
தென் சீன கடல் விவகாரத்தில் வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கையாண்டு வருகிறது மேலும் அமெரிக்க போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன.
இவ்வாறான நிலையில் தங்கள் நாட்டின் கடல் பகுதியில் பிற நாடுகளின் கப்பல் செல்லக்கூடாது என்பதற்காக கடலுக்கு அடியில் சங்கிலிபொறிமுறை (chain trap) அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பொறிமுறையை சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையேயான மஞ்சள் கடல் பகுதியில் சீனா அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டு வருவது கடினம்
குறித்த பொறிமுறை கடலுக்கு அடியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கிலியில் கப்பல்கள் சிக்கினால், அதில் இருந்து மீண்டு வருவது கடினம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பொறிமுறையில் சிக்கிய பின்னர் விடுபடுவதற்கு பல மணிநேரம் எடுப்பதால் கப்பலில் இருப்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு கப்பலும் விபத்தில் சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், தான், கடந்த ஒகஸ்ட் மாதம் சீனாவுக்கு சொந்தமான 093-417 என்ற நீர் மூழ்கி கப்பல் குறித்த பொறிமுறையில் சிக்கியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீர் மூழ்கி கப்பல்
மேலும்,இராணுவத்தினரால் வைக்கப்பட்டிருந்த நங்கூரம் மற்றும் இரும்பு சங்கிலியில் நீர் மூழ்கி கப்பல் சிக்கியுள்ளதாகவும் கப்பலை மீட்க 6 மணிநேரம் ஆகியதாகவும் கூறப்படுகிறது.
கப்பலில் உள்ள ஊழியர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் அமைப்புகள் செயல் இழந்து, 21 அதிகாரிகள் உட் பட 55 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சீனா இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
மேலும் இந்த தகவலை தாய்வான் இராணுவமும் மறுத்துள்ளது.எனவே இந்த தகவலில் உண்மை தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
குறித்த விபத்து இடம் பெற்றிருந்தால் அணு கசிவு போன்றவற்றால் நீர் மாசு ஏற்படலாம் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், நீர் மூழ்கி கப்பலில் அணு உலைகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக கதிர்வீச்சு போன்றவை ஏற்பட்டு அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.