ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை..!
தீர்மானம்
ஐ.நாவின் புதிய தீர்மானம் காரணமாக இலங்கை பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது என்று நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், அதிபர் சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"நாடு என்ற ரீதியில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கொள்கை மாற்றம் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான முக்கிய காரணமாகும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் நீதி அமைச்சர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், "வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை விரைவில் ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.
புதிய தீர்மானத்தால் நாடு பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தால் நாட்டுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையும் பாதிக்கப்படலாம்.
இலங்கை தன்னிறைவை அடைந்த நாடாக இருந்தால், இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
