நாளை நாடு முழுவதும் வைத்தியர்கள் வேலை நிறுத்தம் - வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By pavan
நாளை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக ஒன்றியச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
மருத்துவ தொழில் சங்கங்களும் ஆதரவு
இதில் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் பங்கேற்பார்கள் என்றும், இதற்கு அனைத்து மருத்துவ தொழில் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்