நாட்டில் இடம்பெற்ற பாரிய சட்ட விரோத டொலர் பரிமாற்றம்- அதிரடிப்படையினரால் அம்பலம்!
Dollar to Sri Lankan Rupee
STF
Sri Lanka
By Kalaimathy
உண்டியல் பணப் பரிமாற்று முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டாலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
உண்டியல் மற்றும் ஹவாலா முறைகள் மூலம் செய்யப்படும் உத்தியோகபூர்வமற்ற பணப்பரிமாற்றங்களை நிறுத்தும் முயற்சியில், இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் திறந்த கணக்கு இறக்குமதியையும் தடை செய்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த இருவரையும் அதிரடிப்படையினர் கைது செய்ததோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்