உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - வெளியானது மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான தீர்ப்பு!

Sri Lanka Bomb Blast Maithripala Sirisena Sri Lanka Supreme Court of Sri Lanka Easter Attack Sri Lanka
By Kalaimathy Jan 12, 2023 08:14 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - வெளியானது மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான தீர்ப்பு! | Sri Lanka Easter Attack Judgment Maithripala Court

இந்நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்பு, இன்று வழங்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

உயர்நீதிமன்றம் வழக்கை நிறைவுறுத்தி அனைத்துத் தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதியிலிருந்து 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் திகதி அறிவிப்பு இன்றி வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாமில் உள்ளடங்கும் நீதியரசர் தெஹிதெனிய நாளை 13 ஆம் திகதியுடன் ஓய்வுபெறும் நிலையில், இன்று 12 ஆம் திகதி மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

மனுத்தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - வெளியானது மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான தீர்ப்பு! | Sri Lanka Easter Attack Judgment Maithripala Court

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டல் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய அதிபருமான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்.

இந்த 12 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக கடந்த 2019 ஒக்டோபர் 2 ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்தது. அது முதல் மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தன. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி காமினி பெரேரா, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே,சட்டத்தரணி வர்தனி கருணாரத்ன, சட்டத்தரணி லக்ஷான் டயஸ், அதிபர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அதிபர் சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,சட்டத்தரணி தனுக நந்தசிறி, அதிபர் சட்டத்தரணி மனோகர டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தனர்.

ரணில் சார்பான சட்டத்தரணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - வெளியானது மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான தீர்ப்பு! | Sri Lanka Easter Attack Judgment Maithripala Court

பிரதிவாதிகளில் சிலருக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அதிபர் சட்டத்தரணி பிரியந்த நாவான, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, சிரேஷ்ட அரச சட்டவாதி சுரேகா அஹமட், அரச சட்டவாதி இந்துனி புஞ்சிஹேவா ஆகியோரைக் கொண்ட குழுவொன்று முன்னிலையானது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவும், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவும், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன சார்பில் அதிபர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் முன்னிலையாகினர்.

ஏனைய பிரதிவாதிகளுக்காக அதிபர் சட்டத்தரணி மொஹான் வீரகோன், அதிபர் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, அதிபர் சட்டத்தரணி துலிந்த வீரசூரிய, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, சட்டத்தரணி கே.வி.எஸ். குணசேகரராஜன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர்.

உயர்நீதிமன்றின் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - வெளியானது மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான தீர்ப்பு! | Sri Lanka Easter Attack Judgment Maithripala Court

இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.

பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிராக அரசமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அறிவித்து உயர்நீதிமன்றம் அதனை அறிவித்திருந்தது.

அவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்

ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023