சந்தர்ப்பவாத இனவாதிகள் தொடர்பில் வெளிப்படுத்திய சஜித்

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lanka Qatar
By Vanan Jul 01, 2022 04:23 PM GMT
Report

 இனவாதத்தினைத் தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் செயற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று (1) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இனவாதத்தினை தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரம்

சந்தர்ப்பவாத இனவாதிகள் தொடர்பில் வெளிப்படுத்திய சஜித் | Sri Lanka Economic Crisis About Sajith Press

அந்த அழைப்பினை ஏற்று அதனைத் திறப்பதில் நான் கலந்து கொண்டடேன். அன்று அதனை இலக்காகக் கொண்டு எனக்கு எதிராக பாரதூரமான விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இனவாதத்தினைத் தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் செயற்பட்டனர். குறுகிய இனவாத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டார் போன்ற நாடுகளை ஆத்திரமடையச் செய்யப்பட்டது.

இவ்வாறு அன்று போராட்டம் நடத்திய குழுவினர் இன்று அந்நாட்டிற்கு எரிபொருளைப் பெறுவதற்காகச் சென்றுள்ளனர். அன்று மோசமான நிலையிலிருந்த கட்டார் இன்று எவ்வாறு முன்னேற்றமடைந்துள்ளது பாருங்கள்.

இனவாதத்தை எப்போதும் தமது பிழைப்புக்காக பயன்படுத்தும் குழுக்கள் நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இனவாதத்தால் நாட்டுக்கு பெரும் பாதகம்

சந்தர்ப்பவாத இனவாதிகள் தொடர்பில் வெளிப்படுத்திய சஜித் | Sri Lanka Economic Crisis About Sajith Press

தற்போதைய அரசாங்கத்துடன் உலகின் பல நாடுகள் கோபமடைந்துள்ளமைக்கான காரணம் இனவாத, இனவெறி செயற்பாடுகளின் காரணமாகவே ஆகும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மிக விரைவாக செய்ய வேண்டியது தரப்படுத்தல்களில் இலங்கையை முன்னேற்றுவதற்காக பொருளாதார மாறுபாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிந்து கொள்ளும் எந்தவொரு நாடும், முதலில் செய்தது சர்வதேசத்துடன் முறையானதொரு கொடுக்கல் வாங்கலை ஏற்படுத்திக் கொண்டமையாகும். எமது நாடு செய்தது அதற்கு முரணான செயற்பாட்டையே ஆகும்.

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது, அதற்கு முறையான, வெளிப்படையான வேலைத்திட்டம் தேவை” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024