மோசமான நிலையை அடையக் கூடும் - இலங்கை தொடர்பில் கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில், உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏறக்குறைய இரண்டு பருவகாலமாக பயிர்ச்செய்கை தோல்வியடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் உணவு உற்பத்தி கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது.
மற்றும் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் தானியங்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமடையவுள்ள உணவு பாதுகாப்பு
எனவே பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன.
அத்துடன் 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளன.
30% மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்றித் தவிப்பு
ஏறக்குறைய 30% மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், எனவே அவசர உதவி தாமதமானால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என இலங்கை உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர சரண் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

