என்னால் மாத்திரம் நாட்டை மீட்க முடியாது! கோட்டாபய பகிரங்கம்
என்னால் மாத்திரம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில்விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் போது அரச தலைவர் அவர் இதனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
ரணில் திறமையானவர்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில்விக்ரமசிங்கவுக்கும் உண்டு. அதனால்தான் அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளேன். அதேவேளை, திறமைமிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருகின்றேன்", எனக் குறிப்பிட்டார்
