இலங்கையர்களுக்கு ஏற்பட்ட அவலம்..!! வீதிகளில் உறங்கவேண்டிய துர்ப்பாக்கியம் (படங்கள்)
வீதிகளில் உறங்கவேண்டிய துர்ப்பாக்கியம்
இலங்கையில் நெருக்கடி நிலை உச்சம் தொட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இன்று வீதிகளில் உறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக சென்ற மக்கள், எரிவாயு நிலையம் ஒன்றின் முன்னால் வீதிகளில் இரவில் தூங்குகின்ற படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாலும், எரிவாயு தட்டுப்பாட்டு பிரச்சினை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது.
மக்கள் எரிவாயு கொள்கலன்களுடன் காத்திருக்கும் நிலை
நாடளாவிய ரீதியிலுள்ள எரிவாயு விநியோக நிலையங்களின் முன்னால் மக்கள் எரிவாயு கொள்கலன்களுடன் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகின்றது.
மறுபக்கத்தில் கறுப்புச் சந்தையில் எரிவாயு அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்ற சம்பவங்களும் பல இடங்களில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தாம் வாக்களித்து நாடாளுமன்றிற்கு அனுப்பியவர்கள் சொகுசு மாடி வீடுகளில் படுத்துறங்கும் போது அவர்களுக்காக வாக்களித்த தாம் இன்று வீதிகளில் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதாக வீதிகளில் படுத்துறங்கும் மக்கள் சாடியுள்ளனர்.


