இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நிபந்தனை
இலங்கைக்கான புதிய திட்டமொன்றுக்கு இலங்கையின் கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதங்களை எதிர்பார்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நாடு முகம்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுளதாக நேற்றைய தினம் (19) சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவானது ஒகஸ்ட் மாதம் 24 முதல் 31 வரை இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்த தொகை
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் அவசியம் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட ஊழல்கள், நிர்வாக சீரின்மை மற்றும் கொரோனா தொற்றுக்கள் போன்றவற்றால் கடன்தொகையை
அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் கடன் தொகையானது 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
IMF staff to visit Colombo August 24-31 to continue discussions with the Sri Lankan authorities on economic and financial reforms and policies: https://t.co/WpbaAxgQUQ
— IMF (@IMFNews) August 19, 2022

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்