நாட்டில் மின்சார துண்டிப்பு தொடருமா? வெளியாகியுள்ள அறிவிப்பு!
நாட்டில் ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்சார துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவயவருகையில்,
இலங்கையில் மின்சார விநியோகத்தில்,அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் இன்று மாலையில் புதிய அறிவிப்புக்கள் வெளியாகும் என்று மின்சாரசபை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது, மின்சாரம் ஜனவரி இறுதி வரை துண்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது மின்சாரசபையிடம் கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் மற்றும் நீர் மின்சார உற்பத்தியின் கொள்ளளவு உட்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
இந்தநிலையில் ஏற்கனவே இன்று 27ஆம் திகதி வரை எரிபொருட்களின் கையிருப்பு இருப்பதன் காரணமாக, இன்று வரை மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் இருக்காது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.