முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகருக்குள் அதிகாலைவேளை புகுந்த யானையால் பதற்றம்
Tamils
Mullaitivu
Elephant
By Laksi
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று மக்களின் வாழிடங்களை சேதப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (20.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குடியிருப்புக்குள் புகுந்த யானை
புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்து காணிகளின் வேலிகளை நாசப்படுத்தியுள்ளதுடன் அப் பகுதியில்அமைந்துள் கணேசா வித்தியாலயத்தின் மதிலினையும் சேதப்படுத்தி உள்ளது.
இதனால் பாடசாலையின் ஒருபகுதி மதில் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது.
அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு கைவேலி, வேணாவில் பகுதிகளில் காட்டுயானைகளின்
தொல்லை அதிகரித்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்