இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கொவிட் பரிசோதனை முடிவு வெளிவந்தது
covid19
england
srlanka
By Vasanth
இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தநத இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்தே இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 14 மற்றும் 22ம் திகதிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
தற்போது இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி