வளங்கள் இருந்தும் பயன்படுத்தாத நாடாக இலங்கை
இலங்கையில் அதிகளவான ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் அவை சரிவர பயன்படுத்தப்படவில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச். ஹடாட்-ஜெர்வோஸ் (Faris H. Hadad-Zervos) இதனை தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மூலக்கூறுகள்
[Z45Q2G
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலக்கூறுகள் இலங்கையில் அதிகம் காணப்படுகிறது. எனினும், அவற்றை சரிவர பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.
இதனால் ஏற்றுமதி மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய கணிசமான வருவாயினை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிறந்த முன்னேற்றம்

பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்த இலங்கை, கடந்த ஒரு வருட காலத்துக்குள் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” - என வலியுறுத்தியுள்ளார்.