இன்று முதல் மேலும் அதிகரிக்கவுள்ள விலைவாசி- வருகிறது இறுதித் தீர்மானம்!
நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு நிலவுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாகவே இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
