சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் வெளியாகிய கருத்துக்கலையும், கல்வியமைச்சையும் மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இவற்றில், கணிதம், ஆங்கிலம், தாய்மொழி, மதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 5 பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாடங்களைத் தெரிவுசெய்ய வாய்ப்பு
கூடுதலாக, மாணவர்கள் வேறு இரண்டு பாடங்களைத் தெரிவுசெய்ய வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, தொழில்நுட்பம், அழகியல், மேலாண்மை, தொழில்முனைவோர், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், சுகாதாரம் மற்றும் இயற்பியல் ஆய்வுகள் ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ் பரந்த அளவிலான பாடங்களிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

