மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவு குறித்து வெளியான தகவல்
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை அனுமதிப்பதற்கும், அணுகலை விரிவுபடுத்துவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
அந்த வகையில் விசேட தேவைகள் உள்ள மாணவர்களை உள்ளடக்குவதற்குத் தேவையான வசதிகளுடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்படும் என்று அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது, குறைந்த எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளி மாணவர்களை அனுமதிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
எனினும், எதிர்காலத் திட்டங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இசை போன்ற பாடங்களில் அவர்களைச் சேர்ப்பதும் உள்ளடங்கும் என்று கபில செனவிரத்ன கூறினார்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் தங்குமிட வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தங்குமிட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |