500 ரூபாய் வரை உயரும் பாணின் விலை! மோசமடைய போகும் நெருக்கடி
பாண்
தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும் என நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழைகளின் உணவு
பேக்கரி தொழிலில் பணியாற்றிய பலரின் வேலைகள் பறிபோயுள்ளன.
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், பாண் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை. தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும்.
ஏழைகளின் உணவாக இருந்த பாண் தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

