தோடம் பழம் ஒன்றின் விலை 600 ரூபா: 5 ஆயிரத்தை தொட்ட திராட்சை!
Food Shortages
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் ஒன்றின் விலையானது 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் தோடம் பழம் 3 ஆயிரத்து 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை பழம் 5 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கமைய, பிரபல சிறப்பு அங்காடி நிறுவனம் ஒன்றின் கிளைகளில் இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்றின் எடைக்கு ஏற்ப 621 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை அதிகரிப்புக்கு காரணம்
இறக்குமதிக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை, இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் அந்திய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி