ரஷ்யாவிற்கு பயணமாகும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) ரஷ்யாவிற்கு (Russia) பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் ரஷ்யாவிற்கு செல்லவுள்ளார் .
ஐஓஆர்ஏ (Indian Ocean Rim Association) அமைச்சர்கள் குழுவின் தற்போதைய தலைவர் என்ற ரீதியில் அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.
உலகளாவிய வளர்ச்சி
"நியாயமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளின் கீழ் ரஷ்யா இந்த மாநாட்டை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், "உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்துதல், நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல், உலகளாவிய பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத்தின் பங்கு (Global South) " என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வழங்கப்படவுள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுன்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |