சிறிலங்கா அதிபரின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Magistrate Court
SL Protest
By Kalaimathy
சிறிலங்காவில் கடந்த மாதம் 9 ஆம் திகதி அரச அதிபர் மாளிகைக்குள் பிரவேசித்து அதிபர் அமரும் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தெரணியகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
28 வயதான இந்த நபர் சமன்புரகம என்ற பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிபர் மாளிகைக்குள் புகுந்த நபருக்கு விளக்கமறியல்
சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அலரி மாளிகைக்குள் புகுந்து மக்களை ஒன்று கூட்டிய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேர் ஜா-எல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 மற்றும் 37 வயதான இந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்