தயாசிறியின் கட்சி உறுப்புரிமை பறிப்பு : மைத்திரிக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) பொதுச் செயலாளராக கடமையாற்றிய தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) கட்சி உறுப்புரிமையை பறித்து வெளியிடப்பட்ட கடிதம் மீண்டும் பெறப்படுமா இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்கு பிரதிவாதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தம்மை பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக தயாசிறி ஜயசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (05) உச்ச நீதிமன்றில்((Supreme Court of Sri Lanka) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரச்சினைக் கடிதம்
மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பதில் செயலாளர் நாயகம் சரத் ஏக்கநாயக்க (Sarath Ekanayake) ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மனுதாரருக்கு எதிரான பிரச்சினைக் கடிதம் மீண்டும் பெறப்படுமா இல்லையா என்ற முடிவை அறிவிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க ஆகியோருக்கு அன்றைய தினம் இந்தத் தீர்மானத்தை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |