மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தடை நீடிப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் (Chandrika Kumaratunga) தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான தடை உத்தரவை கொழும்பு (Colombo) மாவட்ட நீதிபதி சந்துன் விதான (Sandun Withana) வரும் 12ம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சட்டரீதியான உரிமை
மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டரீதியான உரிமை கிடையாது என சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |