சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

SLFP Dr Wijeyadasa Rajapakshe Maithripala Sirisena Dayasiri Jayasekara Sri Lanka Presidential Election 2024
By Sathangani Jul 27, 2024 09:51 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) சிறிலங்கா சுதந்திர கட்சி (SLFP) சார்பில் களமிறங்குவதற்கு இதுவரையில் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை முன்னிலைப்படுத்துவது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.

கட்சியின் அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களுடனும் ஏனைய உறுப்பினர்களுடன் பேசி தீர்மானமொன்றை எடுப்போம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி...! நிதியமைச்சு வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி...! நிதியமைச்சு வெளியிட்ட தகவல்

விஜேதாச ராஜபக்ச வேட்பாளர் அல்ல

அத்துடன், தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக சுதந்திர கட்சி எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாடு மற்றும் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து பொருத்தமானதொரு தீர்மானத்தை எடுப்போம்.

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல் | Sri Lanka Freedom Party Presidential Candidate

விஜேதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அல்ல. சுதந்திர கட்சியில் எவரும் தீர்மானத்தை முன்வைத்து அவரை வேட்பாளராகக் களமிறக்கவுமில்லை.

வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றி பெறக் கூடிய நிலைமையில் சுதந்திர கட்சி இல்லை என்ற யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) நிர்வாகத்தின் கீழ் கட்சி சுக்கு நூறாக சிதறியுள்ளது. இந்த கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் 5 ஆண்டுகளாவது பாடுபட வேண்டும்.அவரும், நிமல் சிறிபா டி சில்வாவும் (Nimal Siripala de Silva) எடுத்த தவறான தீர்மானங்கள் கட்சியின் சீரழிவுக்கு வழி வகுத்தன.

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல் | Sri Lanka Freedom Party Presidential Candidate

எனவே கட்சியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற நான் தயாராக இல்லை. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் தீர்மானிக்கவில்லை. தனிநபராக என்னால் அவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியாது.

தேர்தல் குறித்த தீர்மானம் கட்சியின் தீர்மானமாக இருக்க வேண்டும். கட்சி எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அதற்கு நான் ஆதரவளிப்பேன்“ என தெரிவித்தார்.  

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான் ...! அடித்துக் கூறும் ராஜபக்ச விசுவாசி

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான் ...! அடித்துக் கூறும் ராஜபக்ச விசுவாசி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025