ஸ்பெயின் கடற்பரப்பில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து: 14 பேர் சடலங்களாக மீட்பு..!
ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 அகதிகளுடன் பயணித்த படகு மீட்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல் ஹியர்ரோ தீவிலிருந்து சுமார் 72 கிலோமீற்றர் தொலைவில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் படகிலிருந்து 8 முதல் 10 சடலங்களை ஆரம்பத்தில் மீட்டதுடன், ஆபத்தான நிலையில் இருந்த ஆறு பேர் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கேனரி தீவுகள்
பின்னர் மொத்தம் 14 பேரின் சடலங்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மற்றொரு படகில் வந்த 84 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேனரி தீவுகளுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நவம்பர் 25ஆம் திகதி ஒரே நாளில் 2,100 பேர் வருகை தந்துள்ளனர். இது இதுவரையான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு ஸ்பெயினை அடைய முயற்சிக்கும் அகதிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |