ரணிலுக்கு பெருகும் ஆதரவு: ஜனாதிபதி பக்கம் சாய்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
மகிந்தவுக்குக் பறந்த கடிதம்
அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்திய 116 பேர் கொண்ட குழு இன்று (31) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை (Podujana Peramuna Party) பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga
) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |