மொட்டுவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு
சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நூறுக்கும் மேற்பட்ட மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்திய 116 பேர் கொண்ட குழு இன்று (31) இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.
இதேவேளை ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆதரவளிப்பதாக சம்பந்தப்பட்ட குழுவினர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தெரிவிப்பு
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.
அத்துடன் ஒன்பது மாகாண அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்க (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்க 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக நேற்று (30) தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |