எரிபொருளுக்காக வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்!
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kalaimathy
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாணந்துறை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தொடரும் உயிரிழப்பு
இலங்கையில் அண்மைய காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நின்றவர்களில் 5க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்