எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு சென்ற நபர் மாயம் - பதறும் மனைவி!

Sri Lanka Police Missing Persons Colombo Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jun 24, 2022 11:25 AM GMT
Report

மலர்ச்சாலையின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வீட்டில் இருந்து சென்ற தனது கணவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனக் கூறி மனைவி அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பலாங்கொடை கஹவே பகுதியில் உள்ள மலர்ச்சாலையின் உரிமையாளரது மனைவியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கணவன் வீடு திரும்பவில்லை என்பதுடன் அவரது கையடக்க தொலைபேசியும் செயலிழந்துள்ளது எனவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு சென்ற நபர் மாயம் - பதறும் மனைவி! | Sri Lanka Fuel Crisis Missing Police Investigation

குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்திய போதும் தொடர்புக்கொள்ள முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

எரிபொருள் இல்லாது மலர்ச்சாலையின் நாளாந்த பணிகளை செய்ய முடியாது என்பதால், எனது கணவர் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று எரிபொருள் இல்லை எனக் கூறி வீடு திரும்பி இருந்தார்.

தொலைபேசியில் அழைத்தது யார்?

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு சென்ற நபர் மாயம் - பதறும் மனைவி! | Sri Lanka Fuel Crisis Missing Police Investigation

வீடு திரும்பிய எனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறினார். இதனையடுத்து கணவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றதாகவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்பதால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்து.

எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறியது யார்? என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களாக மாயம்

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு சென்ற நபர் மாயம் - பதறும் மனைவி! | Sri Lanka Fuel Crisis Missing Police Investigation

அவர் வீட்டை விட்டு சென்றதில் இருந்து அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரை வீடு திரும்பவில்லை என்பது மர்மமாக இருப்பதாகவும் மனைவி, காவல்துறையில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு நாட்களாக வீடு திரும்பாத மலர்ச்சாலையின் உரிமையாளர் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் இல்லை எனவும் அவருக்கு எதிரிகள் இருந்தனர் என்பதற்கான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026