டீசலை வழங்க மாற்று ஏற்பாடு
Sri Lanka Economic Crisis
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Vanan
டீசலை வழங்க மாற்று ஏற்பாடு
தனியார் பேருந்துகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்காக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு
டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் குறைந்தளவிலான தனியார் பேருந்து சேவைகளே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி