எரிபொருள் கையிருப்புக்கள் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும் அபாயம்!

Puttalam Sri Lanka Sri Lanka Fuel Crisis Sapugaskanda
By Kalaimathy Jul 01, 2022 11:58 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ள நிலையில், நாளையுடன் நுரைச்சோலை தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய அனல் மின் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு அனைத்தும் தீர்ந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் மின்சார நெருக்கடிகள் தொடர்வதுடன், மின்தடைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

எரிபொருள் முடிவுறும் தருவாயில்

எரிபொருள் கையிருப்புக்கள் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும் அபாயம்! | Sri Lanka Fuel Electri City Crisis Transport

அனல் மின் நிலையங்களில் எரிபொருள் கையிருப்புகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி சப்புகஸ்கந்தையின் இரண்டு அனல் மின் நிலையங்கள் மற்றும் பார்கே அனல் மின் நிலையங்களில் 04 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ள போதிலும், ஏனைய நிலையங்களில் ஒரு நாளுக்கு தேவையான டீசல் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெலனி திஸ்ஸ, மத்துகம, கொலன்னாவ, எம்பிலிப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அனல் மின் நிலையங்களின் டீசல் கையிருப்புக்கள் நாளையுடன் நிறைவடைகின்றன.

பகிரங்கப்படுத்திய ஐ.பி.சி தமிழ்

எரிபொருள் கையிருப்புக்கள் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும் அபாயம்! | Sri Lanka Fuel Electri City Crisis Transport

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவுவண்டிகள் சுப்பர் டீசல் இன்மையால் முடக்கத்திற்குள் செல்லும் நிலையில், அந்த வண்டிகளுக்கு கொலன்னாவை அனல் மின் நிலையத்தில் இருந்தே எரிபொருளை பெறவேண்டிய ஒரு தெரிவு காணப்பட்ட போதிலும், அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மேலும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, புங்குடுதீவு, மற்றும் அச்சுவேலி ஆகிய வைத்தியசாலைகளில் நோயாளர் காவு வண்டிகள் எரிபொருள் இல்லாமையினால் முடங்கிய விடையத்தை ஐ.பி.சி தமிழ் பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

மாத்தறை அனல் மின் நிலையங்களில் முற்றாகத் தீர்ந்த கையிருப்பு

எரிபொருள் கையிருப்புக்கள் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும் அபாயம்! | Sri Lanka Fuel Electri City Crisis Transport

இதேவேளை எம்பிலிப்பிட்டி மற்றும் மாத்தறை அனல் மின் நிலையங்களின் தற்போதைய தரவுகளின் படி டீசல் கையிப்புக்கள் முற்றாக தீர்ந்துவிட்டன.

எனினும் புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகளில் தாமதம் ஆகக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026