நாடு முற்றாக முடங்கும் அபாயம் - தென்னிலங்கையில் இருந்து வெளியான தகவல்!
நாடு எதிர்வரும் வாரத்தில் முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுப் போக்குவரத்துச் சேவை பேருந்துகள் மட்டுமன்றி சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ளதாகவும், எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் வரை இந்நிலை தொடரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் டீசல் கப்பலொன்றும், 22ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.