நைஜீரியாவிடமும் கடன் கோரும் சிறிலங்கா அரசாங்கம்!
loan
nigeria
sri Lanka
udayagammanpila
seeks oil
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கம், நைஜீரியாவிடம் நீண்டகால கடன் அடிப்படையில் நாட்டுக்கு கச்சா எண்ணெயை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் சிறிலங்காவிற்கான நைஜீரிய தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் கம்மன்பில இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. எது எப்படி இருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நாடு எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்நோக்கி வருகிறது.
இதன் காரணமாக நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக சிறிலங்கா ஏற்கனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி