இந்த நிலைமை தொடர்ந்தால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்- அமைச்சர் கடுமையான எச்சரிக்கை!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என எரி சக்தி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளினை ஏற்றிச்செல்லும் கொள்களன்களை சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயணிக்கும் லொறிகளை மடக்கிப் பிடித்து, அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை தரையிறக்குமாறும், அவ்வாறு இல்லையென்றால் லொறிகளுக்கு தீ வைப்பதாகவும் சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் போக்குவரத்து ஊழியர்களின் நலன் கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.