போராட்டம் நடத்தும் உரிமையை அடக்க முயற்சித்தால்..... சிறிலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
ஊடகவியலாளர் உட்பட அனைவருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து கவலையடைவதாகவும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்போர் போராட்டங்கங்கள் தொடர்பாக ஆராய உரிமை இருப்பதாகவும் அவர்களின் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கும் ஐ.நா
மேலும் காலிமுகத்திடல் போராட்டகாரர்களை கலைக்க பலத்தை பயன்படுத்தியமை சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
அமைதியாக போராட்டத்தை நடத்தும் உரிமையை அடக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை மேலும் மோசமான நிலைமைக்கு செல்லும் எனவும் ஹெனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.