இம்மாத இறுதிக்குள் தீர்வு - லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவித்தல்
நாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 100 வீதம் நிவர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சுமார் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
47 இலட்சம் எரிவாயு தேவை
எவ்வாறாயினும், மேலும் 40 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கும் மேலாக எரிவாயு விநியோகம் இடம்பெறாத நிலையில், கடந்த 11ஆம் திகதி முதல் மீண்டும் எரிவாயு விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, நாடு முழுவதும் 47 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களுக்கான தேவைப்பாடு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.