நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்தது இந்தியா
srilanka
india
oxygen
By Sumithiran
இலங்கையில் அண்மைய நாட்களாக கொவிட் தொற்றுக்குள்ளாவோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா மரணங்களும் நாளாந்தம் படிப்படியாக அதிகரித்து 150 ஐ கடந்து விட்டது.
இந்த நிலையில் வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு ஒட்சிசன் தொடர்பில் இலங்கை பெரும் சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் கொவிட்−19 சிகிச்சைகளுக்கு தேவையான 100 மெற்றிக்தொன் ஒக்சிசனை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வாரம் ஒக்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி