கிழக்கிலும் வெடித்தது போராட்டம்- நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டது பலத்த பாதுகாப்பு!
கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக மட்டக்களப்பிலும் போராட்டம் வெடித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நாடுபூராகவும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று மாலை 4 மணியளவில் கல்லடிப் பாலத்தில் ஒன்று சேர்ந்த அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.




