அரிசி இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்

Sri Lanka Government Of Sri Lanka Rice Price
By Harrish Apr 02, 2025 08:21 AM GMT
Report

நாட்டில், நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி (Rice Import) செய்ய பரிந்துரைத்துள்ளது.

அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருப்பதோடு, சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி போதியளவு அரிசியை கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு

புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு

அரிசி தட்டுப்பாட்டு

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் 5 ஆவது தடவையாக கூடியது.

அரிசி இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம் | Sri Lanka Gov Decision Regarding Rice Import

மேலும், இந்த ஆண்டில் அதிக மழை பெய்தமையால், இரண்டு முறை விளைச்சல்களுக்கு சேதம் ஏற்பட்டு, எதிர்பார்த்த அறுவடையில் கணிசமான அளவு குறைந்துள்ளதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

அரிசி இறக்குமதி 

கால்நடை உணவிற்கு முறையற்ற விதத்தில் அரிசியைப் பயன்படுத்துவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு மற்றொரு முக்கிய காரணம் எனவும், கால்நடை உற்பத்தித் தொழிலில் கால்நடை உணவுத் தேவைக்காக உடைத்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று உணவுகளை பயன்படுத்துவது குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம் | Sri Lanka Gov Decision Regarding Rice Import

அதன்படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சின் பணிப்பாளர் தலைமையிலான குழுவை அமைப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அதிகரிக்கும் ஜனாதிபதி அநுர மற்றும் நாமல் மோதல்

அதிகரிக்கும் ஜனாதிபதி அநுர மற்றும் நாமல் மோதல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016