வெடித்துச் சிதறும் கருத்து முரண்பாடுகள்- பதவி விலகத் தயாராகும் அலி சப்ரி!

Ali Sabry Sri Lanka Government Of Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Kalaimathy May 07, 2022 11:05 AM GMT
Report

சிறிலங்காவின் நிதி அமைச்சர் அலி சப்ரி தனத பதவியைிலிருந்து விலகவுள்ளதாக அரசாங்கத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்காக இரண்டாவது முறையாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அலி சப்ரி நிதியமைச்சர் பதவியில் இருந்து விலத்க தயாராகி வருவதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி என்பதை, யோசனை முன்வைத்துள்ள அணியினர் தெளிவுப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இப்படியான நிலைமையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்படக் கூடும் என எதிர்த் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை குறைப்பதற்கு பதிலாக புதிய வரவு செலவுத் திட்டம் மூலம் எதிர்ப்பு மேலும் அதிகரித்து வெடித்து சிதறக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் நீடிக்கும் என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் எனவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியில் இருக்க எதிர்பார்க்கவில்லை என அரச தலைவர் தலைமையில் நேற்று கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அலி சப்ரி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்