கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாத அரசாங்கமே தற்போது!
சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
ஆனால் அவர்கள் இருவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று புத்தளத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் பேசிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
3 ஆண்டுகள் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 6 வருடங்கள் கடந்தால் அது மறைக்கப்பட்டுவிடும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
