அரசியல் வெறுத்துவிட்டது! கவலை வெளியிட்டுள்ள சந்திரிக்கா
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை தான் வெறுப்பதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டணி
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
எனினும், சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து, தற்போது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான நிகழ்வுகளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க பங்கேற்றுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
வெறுப்பு
இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசியலின் தற்போதைய நிலை தற்போது தான் வெறுப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், அரசியல் தொடர்பில் கருத்து வெளியிட எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |