திடீர் பதவி விலகலை அறிவித்தார் முக்கிய நிறுவனம் ஒன்றின் தலைவர்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Food Crisis
Dollars
By Kalaimathy
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமது பதவி விலகல் கடிதத்தை வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த விஜித ஹேரத் என்பவரும் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் குறித்த பதவிக்கு முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தொடர் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிவாயு எரிபொருள் நெருக்கடி என்பன அதிகரித்துள்ள நிலையில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்ச்சியாக தங்களின் பதவிகளை திடீரென இராஜினாமா செய்வதும் குறிப்பிடத்தக்கது.

