வன்முறை சம்பவங்களால் வீடுகளையிழந்த அமைச்சர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
By Kalaimathy
வன்முறை சம்பவங்கள் காரணமாக வீடுகளை இழந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தலவத்துகொடை வீடமைப்பு தொகுதியில் தற்காலிக வீடுகளை வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 55 வீடுகள் தாக்குதல் மற்றும் தீ வைப்பு காரணமாக அழிவடைந்தன.
இதனை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக ஆறு காவல்துறை பாதுகாப்பை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் நடத்த சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்