இலவச கல்விக்கும் வசூலிக்கப்படும் பணம் - கல்வியைத் திட்டமிட்டு முடக்கும் "ரணில் ராஜபக்ச"

Ministry of Education Ranil Wickremesinghe Sri Lanka Ceylon Teachers Service Union
By Kalaimathy Sep 21, 2022 09:59 AM GMT
Report

"ரணில் ராஜபக்ச" அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு முடக்கி வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது கல்வியில் சித்தியடையாத மாணவர்கள், இலவச தொழில் பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்களை இணைத்து பணம் வசூலிக்கும் முயற்சி

education

தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை உட்பட ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களை இணைத்து பணம் வசூலிக்கும் முறையை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

"தற்போதைய அரசு என்ன செய்துள்ளது? இலவச கற்கைகளுக்கும் பணம் வசூலிக்க தீர்மானம் எடுத்துள்ளது." பணம் வசூலித்து அந்தப் பாடநெறிகளை நடத்துவது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஏழ்மையான மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தொழில் பயிற்சியில் ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு பணம் வசூலிக்க தீர்மானிப்பதால், அந்த மாணவர்களும் அவ்வாறான கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணத்திற்கு விற்கப்படும் கல்வி

இலவச கல்விக்கும் வசூலிக்கப்படும் பணம் - கல்வியைத் திட்டமிட்டு முடக்கும் "ரணில் ராஜபக்ச" | Sri Lanka Government Ranil Education Exam Teachers

“பொதுவாக கிராமங்களில், பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாதவர்கள், வேறு வழிகளில் கல்வி கற்க வேண்டும் என்றால், அது பணத்திற்கு விற்கப்படும் போது, இந்தப் பிள்ளைகள் எங்கே போவார்கள்?, முடியாதவர்களின் கதி என்னவாகும் என்பது நமக்குத் தெரியும்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் உயர் கல்விக்கென தனியான அமைச்சரவை அமைச்சு இருந்த போதிலும், கடந்த அரசாங்க காலத்தில் அது இராஜாங்க அமைச்சு என பெயரிடப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் கல்வி அமைச்சின் மற்றுமொரு பிரிவாக இதனை உருவாக்கியுள்ளது என ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையை அடையும் வாய்ப்பு பணத்தை செலுத்தி கல்வியை பெற வேண்டியுள்ளது. அதேவேளை உயர்நிலைக் கல்வியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் தொழிற்பயிற்சியை கீழ் நிலைக்கு கொண்டுச் செல்வதன் ஊடாக பொறுப்புள்ள தரப்பினர் எதிர்பார்ப்பது என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்த அரசாங்கம் செலவைக் குறைக்க முயற்சிக்கிறது. கல்வியை இல்லாது செய்ய முயற்சிக்கிறது.” எனக் கூறியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடநெறிகளுக்கு பணம் வசூலிக்கும் தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011