ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற அவசர சந்திப்பு!
சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பொன்று அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், அந்த பிரச்சினைகள் தொடர்பில் யோசனைகளைத் தயாரித்து எதிர்வரும் 2 ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்க இந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மற்றுமொரு சந்திப்பையும் அமைச்சர் விமல் வீரவன்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரது வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
